உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பார் கவுன்சிலில் பதிவு செய்த அன்றே பாய்ந்தது 3 வழக்கு! | Kannagi Nagar | Chennai | lawyer

பார் கவுன்சிலில் பதிவு செய்த அன்றே பாய்ந்தது 3 வழக்கு! | Kannagi Nagar | Chennai | lawyer

சென்னை கண்ணகி நகர், இரண்டடுக்கு பகுதியை சேர்ந்தவர் 22 வயதான சந்தோஷ் குமார். இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதை கொண்டாடும் விதமாக இரவில் 100க்கும் மேலான நபர்களுடன் குதிரை சாரட் வண்டியில் மேளங்கள் முழங்க ஊர்வலம் புறப்பட்டார் சந்தோஷ். மக்களுக்கு இடையூறாக 1 கி.மீருக்கு டிராபிக் ஜாம் ஏற்படுத்தி சென்றனர். கண்ணகி நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகே பட்டாசு வெடித்து பயங்கர பில்டப்புடன் வந்த கூட்டத்தை போலீஸ் தடுத்து நிறுத்தியது. அனுமதி இல்லாமல் கூட்டம் கூடி இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என எச்சரித்தனர்.

டிச 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை