இத்தாலி பிரதமர் மெலோனிக்கு துருக்கி அதிபர் அட்வைஸ் வைரல் Beautiful|trump|smoking|advice|Gaza
ஹமாஸ் அமைப்பினர் 2023 அக்டோபர் 7ல் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலியர்கள், வெளிநாட்டினர் என சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேரை சிறை பிடித்து பிணைக் கைதிகளாக காஸாவுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் கடும் கோபம் கொண்ட இஸ்ரேல் காஸா மீது இடைவிடாத தாக்குதலை தொடங்கியது. இந்த சண்டையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவினாலும் இரு தரப்புக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டது. எகிப்து, துருக்கி போன்ற நாடுகளும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவாக நின்றன. டிரம்பின் 20 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன. ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும், இஸ்ரேல் காசாவில் இருந்து படைகளை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு அம்சங்களுடன் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. நேற்று எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் (Sharm El Sheikh) நகரில் இஸ்ரேல்-ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இத்தாலி, துருக்கி, பிரான்ஸ் முதலான 20 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் டிரம்பை புகழ்ந்தனர். பதிலுக்கு ஒவ்வொரு தலைவரின் பெயரையும் குறிப்பிட்டு டிரம்ப் நன்றி தெரிவித்தார்.