உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திராவில் விபரீதத்தில் முடிந்த பீர் குடிக்கும் போட்டி! Beer Drinking Competition | Village Youngst

ஆந்திராவில் விபரீதத்தில் முடிந்த பீர் குடிக்கும் போட்டி! Beer Drinking Competition | Village Youngst

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பண்டவாரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் மணிகுமார் சென்னையிலும், புஷ்பராஜ் பெங்களூருவிலும் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணி செய்தனர். ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு இரு இளைஞர்களும் சொந்த ஊர் சென்றனர். வெளியூரில் பணி செய்யும் நண்பர்கள் பலர் ஊருக்கு வந்திருந்தனர். பல நாட்கள் கழித்து நண்பர்கள் ஒன்று சேர்ந்ததால், அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மலை மீது மது அருந்தி உள்ளனர். அப்போது நண்பர்களுக்கு இடையே பீர் குடிக்கும் போட்டி வந்துள்ளது. யார் அதிகம் பீர் குடிப்பது என பந்தயம் கட்டி போட்டி நடத்தியுள்ளனர். இதில் மணிகுமார், புஷ்பராஜ் தலா 19 பீர் குடித்த நிலையில் நினைவிழந்து மயங்கினர். அவர்களை நண்பர்கள் அருகில் உள்ள பீலேரு அரசு ஆஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். இளைஞர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்ததால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 35 வயதான மணிகுமாருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். 27 வயதான புஷ்பராஜ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சங்கராந்தி கொண்டாட வந்த இளைஞர்கள் இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆந்திர போலீசார் விசாரித்து வருகின்றனர். #BeerDrinkingCompetition #VillageYoungsters #AndhraPradesh #BeerLovers #VillageFun #YouthCulture #BeerChallenge #LocalTraditions #AndhraEvents #Celebration #PartyVibes #CraftBeer #SocialGathering #FunTimes #CheersToThat #BeverageChallenge #TraditionMeetsFun #FestivalVibes #AndhraPride

ஜன 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை