உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கனமழை, பேய்காற்று: சூறையாடப்பட்ட பெங்களூரு | Bengaluru rain | Bengaluru Heavy rain

கனமழை, பேய்காற்று: சூறையாடப்பட்ட பெங்களூரு | Bengaluru rain | Bengaluru Heavy rain

கர்நாடகாவில் கனமழை கொட்டி தீர்க்கிறது. பெங்களூருவுக்கு மே 23 வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடம், உடுப்பி, உத்தர கன்னடம், ஹாவேரி, பெலகாவி பகுதிகளுக்கு வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞாயிறு இரவு முதல் திங்கள் காலைக்குள் பெங்களூருவில் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரு நகரில் 105.5 மிமீ மழை பெய்துள்ளது. HAL விமான நிலையத்தில் 78.3 மிமீ மழையும், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 105.5 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

மே 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை