ஸ்காலர்ஷிப் பணத்தையும் பங்கு போடும் பேராசிரியர்கள் Bharathiyar university
தொட்ட இடம் எல்லாமே ஊழல் தவிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் உயர்கல்வி சீர்கேட்டை சரி செய்வது எப்போது? படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்ற பாரதியாரின் வரிகளை புறந்தள்ளவிட முடியாது. கல்வித்துறையில் நடக்கும் அவலங்களை பார்த்தால் அப்படித்தான் சொல்லத்தோன்றும். ஆண்டாண்டு காலமாய் பல ஆன்றோர் சான்றோரை உருவாக்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நாளுக்கு நாள் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. பெற்றோர் மாணவர்கள் கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இது கவலையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிஎச்டி பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ், விழா மேடையிலேயே கவர்னரிடம் புகார் மனு அளித்தார்.