தப்பிக்கும் வழி எல்லாம் பொசுக்கும் ATM திருடன்கள் | Bidar | Karnataka ATM
கர்நாடகா மாநிலம் பீதர் டவுன் அருகே சிவாஜி சவுக் பகுதியில் எஸ்பிஐ வங்கியின் மெயின் பிரான்ச் உள்ளது. நேற்று இங்குள்ள ஏடிஎம்மில் பணம் நிரப்ப ஏஜென்சி வண்டி ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய ஊழியர்கள் கிரி வெங்கடேஷ், சிவக்குமார் பணப்பெட்டியை இறக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்து வந்த 2 ஆசாமிகள், ஊழியர்கள் சுதாரிக்கும் முன் அவர்கள் கண்களில் மிளகாய் பொடியை தூவினர். ஒரு நிமிடம் நிலை குலைந்தாலும் பணத்தை எடுக்க விடாமல் இருவரும் போராடினர்.
ஜன 17, 2025