உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளம் வயதில் நடிகர் பிஜிலி ரமேஷ் மரணம்-அதிர்ச்சி | Bijili Ramesh | Bijili Ramesh last video | cinema

இளம் வயதில் நடிகர் பிஜிலி ரமேஷ் மரணம்-அதிர்ச்சி | Bijili Ramesh | Bijili Ramesh last video | cinema

நடிகர் பிஜிலி ரமேஷ் மரணம் உலுக்கும் கடைசி நேர வீடியோ உயிரை பறித்த குடி பிராங்க் வீடியோ மூலம் பிரபலமாகி பின்னர் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த நடிகர் பிஜிலி ரமேஷ் திங்கள் இரவில் காலமானார். அவருக்கு வயது 46. குடிபழக்கத்துக்கு அடிமையான பிஜிலி ரமேஷ் கல்லீரல் நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கையாக இருந்த அவரது உடல்நிலை நேற்று இரவில் மோசமடைந்தது. இதையடுத்து குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் பிஜிலி ரமேஷ் இறந்தார். சென்னையை சேர்ந்த பிஜிலி ரமேஷ், யூடியூப் சேனல் ஒன்றின் பிராங்க் வீடியோ மூலம் பிரபலமானவர். குடித்து விட்டு ரோட்டில் சென்றவரிடம் அந்த யூடியூப் சேனல் பிராங்க் செய்தது. அவர் செய்த ரகளை தமிழகம் முழுதும் பிரபலமானது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷ், நீ விக்கிற... நான் குடிக்கிறேன்... அப்டினு பிராங்க் வீடியோல பேசுன டயலாக் பெரிய அளவில் வைரல் ஆனது. அடுத்தடுத்து வீடியோக்களில் மக்களை சிரிக்க வைத்த பிஜிலி ரமேசை தேடி சினிமா வாய்ப்புகள் வந்தன. முதலில் ஹிப்ஹாப் ஆதி நடித்த நட்பே துணை படத்தில் பிஜிலி ரமேசுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி