/ தினமலர் டிவி
/ பொது
/ ஆம்னி வேனும் பைக்கும் நேருக்கு நேர் மோதல் | Bike Accident | Tiruvarur police
ஆம்னி வேனும் பைக்கும் நேருக்கு நேர் மோதல் | Bike Accident | Tiruvarur police
திருவாரூர் மாவட்டம் கடகக்குடி பகுதியை சேர்ந்தவர் வினோத் வயது 27. இவருடைய பெரியப்பா மகன்கள் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் கலையரசன் , வயது 30. 3 பேரும் கட்டிட தொழிலாளிகள். நேற்று இரவு வழக்கம் போல வேலைக்கு சென்று பேரளத்திலிருந்து பூந்தோட்டம் நோக்கி ஒரே பைக்கில் திரும்பி கொண்டு இருந்தனர். இஞ்சிக்குடி அருகே வந்த போது எதிரே சிவகங்கையில் இருந்து சுப நிகழ்ச்சிக்காக வந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் வினோத், பார்த்திபன், கலையரசன் ஆகிய மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
டிச 05, 2024