/ தினமலர் டிவி
/ பொது
/ கடைவீதியில் ஆளை மாற்றி வெட்டி சாய்த்த மர்ம கும்பல் | Bike mob crime | men attacked | Thiruvarur
கடைவீதியில் ஆளை மாற்றி வெட்டி சாய்த்த மர்ம கும்பல் | Bike mob crime | men attacked | Thiruvarur
வம்பு பண்ணவன் தப்பிட்டான் அப்பாவி மாட்டிக்கிட்டான் இப்படியெல்லாமா சம்பவம் நடக்கும்? டைட்டில் விதி வலியது என்பார்கள். ஒரு கோரமான சம்பவம் திருவாரூரில் நடந்துள்ளது. திருவாரூர் அருகே அம்மையப்பன் காந்தி நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் துரைராஜ் மகன் நந்தகுமார் (வயது 30). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அதே பகுதியில் உள்ள கடைவீதியில் நந்தகுமாரும், நண்பர் சின்னக்காளியும் நின்றிருந்தனர். அப்போது 2 பைக்கில் வந்த 5 மர்ம நபர்கள் அவரை திடீரென அரிவாளால் வெட்டினர்.
செப் 19, 2025