மசூத் அசார் பாகிஸ்தானிலேயே இல்லையே: பிலாவல் பூட்டோ
இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளை ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ ஜர்தாரி கூறியுள்ளார். செய்தி நிறுவனத்துக்கு பேட்டிஅளித்த அவரிடம், இந்தியாவுடன் நல்ல உறவை கடைபிடிக்கும் விதமாக, லஷ்கரே தொய்பா தலைவர் ஹபீஸ் சையத், ஜெய்ஷி முகமது இயக்க தலைவர் மசூர் அசார் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்கப்பட்டது. பதில் அளித்த பிலாவல் பூட்டோ ஜர்தாரி, ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில்தான் இருக்கிறார். மசூத் அசாரை கைது செய்ய முடியவில்லை. ஆப்கனில் இருப்பதாக நம்புகிறோம். நீதிமன்றத்தில் தேவையான ஆதாரங்களை சமர்பித்தால் ஹபீஸ் சையத், மசூத் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆனால், அடிப்படை விஷயங்களை கடைபிடிக்க இந்திய மறுக்கிறது என்று பிலாவல் பூட்டோ ஜர்தாரி கூறினார். பதவியில் இருந்தபோது, பூட்டோ இதுபோல் பேசியது இல்லை. இப்போது எந்த பதவியிலும் இல்லாத நிலையில் ஞானோதயம் வந்தது போல பேட்டி கொடுத்துள்ளார்.