உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரத்த ஆறு ஓடுமா?; இந்த மிரட்டல் இங்க வேணாம்; பிலாவலுக்கு பதிலடி Bilawal Bhutto| Indus Waters Treaty|P

ரத்த ஆறு ஓடுமா?; இந்த மிரட்டல் இங்க வேணாம்; பிலாவலுக்கு பதிலடி Bilawal Bhutto| Indus Waters Treaty|P

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டத்திற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில், சிந்து நதிநீர் ஒப்பந்ததை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்தது. இது சிந்து, ஜீலம், செனாப் ஆகிய 3 ஆறுகளை உள்ளடக்கிய ஒப்பந்தம். இந்த தண்ணீரை நிறுத்துவதால் குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பாகிஸ்தான் திண்டாடிவிடும். இந்தியாவின் நடவடிக்கையை ஆணவத்தோடு கண்டித்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி மிரட்டலும் விடுத்தார். சிந்து நதி எங்களுடையது. ஒன்று அந்த நதியில் நமது தண்ணீர் பாயும்; இல்லையென்றால் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என்று பேசியிருக்கிறார். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல, பிலாவலின் பேச்சு இந்தியாவின் கோபத்தை மேலும் கிளறி இருக்கிறது. பிலாவல் பூட்டோ சர்தாரியின் பேச்சை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கண்டித்தார். பிலாவல் பூட்டோ ஒரு முட்டாள்; இது வெறும் ஆரம்பம்தான். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும். பிலாவலுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அவர் இப்படித்தான் கத்திக்கொண்டு இருப்பார் என்று அமைச்சர் ஹர்தீப் சிங் கூறினார். பிலாவல் பூட்டோவின் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாகிஸ்தானின் அச்சுறுத்தல், மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா பயப்படாது. பயங்கரவாதத்தை பரப்புவதற்கு மட்டும்தான் பாகிஸ்தானின் வேலையாக இருக்கிறது. பாகிஸ்தான் மக்கள் கூட இதுபோன்ற பேச்சுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பியூஸ் கோயல் கூறினார்.

ஏப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை