உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேரளா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து: அதிர்ச்சி சம்பவம் | boat capsizes kerala

கேரளா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து: அதிர்ச்சி சம்பவம் | boat capsizes kerala

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கம் அருகே முறிஞ்சாபுழா ஏரி உள்ளது. அங்கு கட்டிகுன்னுவிலிருந்து பனவள்ளி நோக்கி ஒரு குழுவினர் படகில் சென்றனர். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஒரே படகில் அளவுக்கு அதிகமானோர் கரை திரும்ப முயற்சித்தனர். அப்போது ஏரியின் நடுப்பகுதியில் படகு எடை தாங்காமல் கவிழ்ந்தது. படகில் பயணித்த 30 பேர் ஏரியில் மூழ்கி தத்தளித்தனர். தகவல் அறிந்து, உள்ளூர்வாசிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்பு பணி நடந்தது. மாயமான பயணிகள் 30 பேரில் 29 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவர் மட்டும் காணாமல் போனதாக தெரிகிறது. அவரை தேடும் பணி நடக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்து வைக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படகு கவிழ்ந்த போது பெண்கள் கூச்சலிடும் சத்தம் கேட்டது. அந்தப் பகுதியில் பலத்த காற்றும், நீரோட்டமும் இருந்தது. சிலர் பாதுகாப்பாக கரைக்கு நீந்தி செல்ல முயற்சித்தனர். நாங்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தோம் என விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் கூறினர்.

ஜூலை 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ