சென்னை அருகே குண்டு வீச்சு: இளைஞர் சீரியஸ் | Bomb | Chennai | TASMAC
ென்னை கடம்பத்துார் அடுத்த சிற்றம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேது, வயது 26. நேற்று மாலை அவரது வீட்டின் முன் நின்றிருந்த போது அங்கே ஒரு கார் வந்தது. காரில் இருந்து இறங்கிய ஆசாமிகள் சேது மீது வெடிகுண்டுகளை வீசினர். இதில் அவரது கை,கால், வயிற்று பகுதியில் தீ காயங்கள் உண்டானது. படுகாயம் அடைந்த சேது அங்கேயே சுருண்டு விழுந்து துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பிடலில் சேர்த்தனர். சேதுவின் உடல் நிலை சீரியசாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து படேல் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஜூன் 23ம் தேதி பேரம்பாக்கம் டாஸ்மாக் கடையில் மோதல் நடந்தது. அப்போது இரு பிரிவினர் மோதிக்கொண்டனர். கலாம்பாக்கத்தை சேர்ந்த லோகேஷ், முகேஷ் ஆகிய இருவருக்கு வெட்டு விழுந்தது. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சேது ஐசியூவில் இருப்பதால் அவருக்கு சுயநினைவு திரும்பிய பின்னரே இன்னும் சில உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.