/ தினமலர் டிவி
/ பொது
/ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்வதால் அதிர்ச்சி | Bomb threat | Air india | Vistara | Fligh
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்வதால் அதிர்ச்சி | Bomb threat | Air india | Vistara | Fligh
இந்தியாவில் கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வருவது விமான நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 12 விமானங்களுக்கு மிரட்டல் வந்தது. இதனால் பயணிகளும் அவதியடைந்து வரும் நிலையில், இன்று மட்டும் சுமார் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மும்பையில் இருந்து காலை 7:05 மணிக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் லண்டன் ஹீத்ரூ ஏர்போர்ட்டில், அந்நாட்டு நேரப்படி 12:05 மணிக்கு தரையிறங்க வேண்டும். ஆனால், லண்டனை நெருங்கிய நேரத்தில், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது.
அக் 17, 2024