/ தினமலர் டிவி
/ பொது
/ போர் லாரியை சுற்றி வளைத்த மக்கள்: ஏலகிரி மலை கிராமத்தில் பரபரப்பு | Villager Clash
போர் லாரியை சுற்றி வளைத்த மக்கள்: ஏலகிரி மலை கிராமத்தில் பரபரப்பு | Villager Clash
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி ஊராட்சியில் 14 கிராமங்கள் உள்ளன. மலை கிராமம் என்பதால் அடிக்கடி தண்ணீர் பிரச்சனை உண்டாகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன் யாரும் போர் போடக்கூடாது என அறிவிப்பு வெளியானதாக தெரிகிறது. கிணறு மட்டும் தான் வெட்ட வேண்டும் என்று ஊராட்சியின் சார்பாக அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன் 6க்கும் மேற்பட்ட ரிக் வண்டிகள் ஏலகிரி மலைக்கு வந்தது. இதை அறிந்த கிராம வண்டியை தடுத்து நிறுத்தி யார் அனுமதியுடன் மலையில் நீங்கள் போர் போடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
நவ 02, 2025