ஷாக் அடித்து துடித்த சிறுவனின் உயிரை காப்பாற்றியவர் நெகிழ்ச்சி
சென்னையில் 4 நாட்களுக்கு முன் மழை பெய்தது. அரும்பாக்கம் மங்கள் நகர் முதல் தெருவில் கடந்த 16ம் தேதி மழைநீர் தேங்கி நின்றது. மாலையில் பள்ளி முடிந்து மழைநீரில் நடந்து சென்ற 9 வயது சிறுவன் ராயன் மின்சாரம் தாங்கியபடி விழுந்து துடித்து கொண்டு இருந்தான். அருகே இருந்த ஜங்ஷன் பாக்ஸில்இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. அந்த சமயத்தில் அந்த வழியாக பைக்கில் வந்த கண்ணன் என்பவர், சிறுவன் துடிப்பதை பார்த்ததும், பைக்கை அப்படியே போட்டுவிட்டு சிறுவனை காப்பாற்ற ஓடினார். சிறுவனின் கையை பிடித்து வேகமாக இழுத்து, மழைநீரில் இருந்து வெளியே கொண்டு வந்தார். பின் தூக்கி சென்று முதலுதவி செய்து உயிரை காப்பாற்றினார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்கு பின் நலமுடன் இருக்கிறான். ஆபத்தை பற்றி சற்றும் யோசிக்காமல் சிறுவனை காப்பாற்றிய கண்ணன் கூறும்போது, என் உயிரை விட சிறுவனின் உயிர்தான் அப்போது முக்கியமாக தோன்றியது என்றார்.