எல்லாம் போச்சு பாஜ எம்பியின் உதவியாளர் கண்ணீர் | Delhi Fire accident
டில்லியில் உள்ள டாக்டர் பிஷம்பர் தாஸ் சாலையில் பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. ராஜ்ய சபா எம்பிக்களுக்கான குடியிருப்பு இது. குடியிருப்பின் கீழ்தளங்களில் எம்பிக்களின் பிஏக்கள் மற்றும் ஸ்டாப்கள் தங்கியுள்ளனர். மேல் தளங்களில் எம்பிக்கள் தங்கியுள்ளனர். இந்த குடியிருப்பை பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு திறந்து வைத்தார். பார்லிமென்ட்டில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் இந்த அபார்ட்மென்ட் இருக்கிறது. ராஜ்ய சபா எம்பிக்கள் டில்லி வரும்போது இந்த குடியிருப்பில் தங்குவது வழக்கம். ஆனால், எம்பிக்களின் பிஏக்கள் உள்ளிட்ட ஊழியர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பர். இந்த பிரம்மபுத்திரா அபார்ட்மென்டில் இன்று பிற்பகல் திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.