திராவிட கட்சிகள் ஆட்சியை நிலைநாட்ட மாற்றி யோசிக்கும் திமுக - அதிமுக
மிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் பலம் தேவை என்ற நிலையில் காங்கிரசின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தவெகவுக்கு கூடுதலாக கிடைத்துள்ளது வேறு எந்த கட்சிகளும் தவெகவை ஆதரிக்க முன்வராத நிலையில் இரு பெறும் திராவிட கட்சிகளும் புதிய சிந்தனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 59 இடங்களை வென்றுள்ள திமுகவும், 47 இடங்களில் வென்றுள்ள அதிமுகவும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்பதாக கூறப்படுகிறது இது குறித்து இரு கட்சிகளுமே தனித் தனியாக ஆலோசித்து வருவதாகவும், விரைவில் நேரடி பேச்சு வார்த்தை துவுங்கும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது பீகாரில் எதிரும் புதிருமாக இருந்த லாலு பிரசாத் - நிதிஷ்குமார் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது போல் தமிழகத்தில் ஸ்டாலின் - பழனிசாமி கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது