Breaking: சிஇஓக்கள் அனுப்பிய சுற்றறிக்கை பற்றி விளக்கம் அளிக்க உத்தரவு!
விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை கலெக்டர்களிடம் அரசு கேள்வி! விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை அடிப்படையில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலுார் சிஇஓக்கள் அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர் பாதுகாப்பான முறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுதல் தொடர்பாக பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் புகைப்படத்தை அனுப்பி வைக்கவும் முதன்மை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர் பள்ளிக் கல்வித்துறையின் நேரடி அறிவுறுத்தல், உத்தரவு இல்லாமல் சிஇஓக்கள் சுற்றறிக்கை அனுப்பியது எப்படி என சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் பள்ளிக் கல்வித்துறை கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது