#Breaking வீடு ஜப்தி நடவடிக்கை: ரத்து செய்ய ராம்குமார் கோரிக்கை
வீடு ஜப்தி நடவடிக்கை: ரத்து செய்ய ராம்குமார் கோரிக்கை நடிகர் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் தயாரித்த ஜகஜால கில்லாடி படத்திற்காக தனியார் பைனான்சியரிடம் இருந்து 3.74 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார் துஷ்யந்த் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் சென்னை ஐகோர்ட்டில் பைனான்சியர் வழக்கு வட்டி, முதல் தொகையை ஈடு செய்ய தி.நகரில் உள்ள நடிகர் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது இந்நிலையில் துஷ்யந்தின் தந்தையும் சிவாஜியின் மகனுமான ராம்குமார் ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தார் தி.நகரில் உள்ள சிவாஜியின் வீடு சகோதரர் பிரபுவுக்கு சொந்தமானது அதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை என ராம்குமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது
மார் 05, 2025