உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எங்கள் விசாரணையே போதும் என்கிறது மத்திய அரசு Air India Plane Crash | UN Plea |India refused |

எங்கள் விசாரணையே போதும் என்கிறது மத்திய அரசு Air India Plane Crash | UN Plea |India refused |

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் கடந்த 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உள்பட 270-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். விபத்து குறித்து இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA),, இந்திய விமான விபத்து புலானாய்வு பணியகம் (AAIB) உள்ளிட்டவை விசாரணை நடத்துன்றன. இந்திய விசாரணை குழுக்களின் விசாரணை பற்றி நிபுணர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கருப்பு பெட்டி, குரல் பதிவு பெட்டியின் தற்போதைய நிலை என்ன, அதில் உள்ள தரவுகளை பெற வெளிநாடுகளின் உதவிகளை நாடப் போகிறோமா என்றெல்லாம் கேட்டனர். இந்த நிலையில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு International Civil Aviation Organization(ICAO) இந்த விசாரணைகளுக்கு தொழில் நுட்ப உதவி வழங்க விருப்பம் தெரிவித்து இருந்தது. ஐநாவின் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து உள்ளது. உள்நாட்டில் நியமித்துள்ள விசாரணை குழுக்களே இந்த விமான விபத்து குறித்த அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து அறிக்கை தரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விபத்து நடந்து 24 மணி நேரத்தில் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. விமானிகள் அறையில் பதிவான குரல் பதிவு கருவியும் கிடைத்தது. அவற்றில் இருந்து தரவுகளை மீட்டு விசாரணை நடத்தும் பணிகள் நடந்து வருகின்றன

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை