உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதத்திற்கு எதிராக அணி திரண்ட உலக நாடுகள்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

பயங்கரவாதத்திற்கு எதிராக அணி திரண்ட உலக நாடுகள்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

#BricsSummit2026 #PahalgamAttack #Russia #Jaishankar #China #Modi #Condemnforpahalgamattack டில்லியில் கடந்த 12, 13ம் தேதி 18வது பிரிக்ஸ் மாநாடு நடந்தது. இந்தியா தலைமையேற்று நடத்திய இந்த மாநாட்டில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங்கின் இந்திய வருகை, உலக நாடுகளை திரும்பிப் பார்க்கச் செய்தது. இந்நிலையில், இந்த மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவித்ததாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. பயங்கராவதத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது என அனைத்து நாடுகளின் தலைவர்களும் ஒரே குரலில் கூறினர். இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்றும் கூறினர். பிரதமர் மோடியின் ராஜதந்திரம் மற்றும் வளர்ச்சி குறித்த செய்தி உலகெங்கும் சென்றடைந்துள்ளது. இந்தியாவின் தலைமையில் பிரிக்ஸ் மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

செப் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை