உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் மரணம் | Bridge collapse | 9 died | Vehicles fall into m

குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் மரணம் | Bridge collapse | 9 died | Vehicles fall into m

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் மாஹிசாகர் ஆற்றின் மீது அமைந்துள்ள கம்பீரா பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வதோதராவில் இருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த பாலம் 1985ல் கட்டப்பட்ட மிக பழமையான பாலம். தேவைப்படும் சமயத்தில் அவ்வப்போது பராமரிப்பு செய்து தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தது. மத்திய குஜராத் - சவுராஷ்டிரா பகுதிகளை இணைக்கும் இந்த பாலம், சவுராஷ்டிரா செல்லும் வாகனங்களுக்கு முக்கிய பாதையாக இருந்த வந்தது. இன்றும் வழக்கம்போல் வாகனங்கள் கடந்து சென்றபோது, காலை 7.30 மணியளவில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

ஜூலை 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி