/ தினமலர் டிவி
/ பொது
/ பெரிய கோயில் முன் விபத்து பாராட்டுகளை குவித்த போலீஸ் | Policeman Rajakannan | Road Clean
பெரிய கோயில் முன் விபத்து பாராட்டுகளை குவித்த போலீஸ் | Policeman Rajakannan | Road Clean
நேற்று பெரிய கோயில் முன் ராஜாகண்ணன் என்ற போக்குவரத்து போலீஸ்காரர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, 2 ஆட்டோக்கள் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. இதில் ஆட்டோக்களிலும் முன் பக்க கண்ணாடிகள் உடைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. அதனால் 2 ஆட்டோக்களையும் டிரைவர்கள் உடனே ஓட்டிச் சென்று விட்டனர். சாலையில் கண்ணாடி துகள்கள் சிதறி கிடந்தது. வாகன ஓட்டிகள் மிரட்சியுடன் பார்த்தபடி வண்டியை ஓட்டிச் சென்றனர்.
நவ 26, 2025