தூத்துக்குடியில் சரிக்கப்பட்ட 17 வயது மாணவன்: அலறல் சம்பவம் | Student Attack | BUS | Srivaikuntam
மாணவனை ரோட்டில் தள்ளி சரிப்பு ஓடும் பஸ்சை நிறுத்தி வெறி செயல் பட்டப்பகலில் பகீர் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறான். வழக்கம் போல காலை பள்ளிக்கு அரசு பஸ்சில் கிளம்பினான். அரியநாயகிபுரம் அடுத்துள்ள கெட்டியம்மாள்புரத்தை கடந்த போது 3 பேர் பஸ்சை மறித்தனர். திபுதிபுவென்று ஏறிய கும்பல் மாணவனை பஸ்சில் இருந்து வெளியே இழுத்து ரோட்டில் தள்ளியது. பஸ் பயணிகள் முன்னிலையில் அரிவாளால் வெட்ட சரித்தனர். மாணவனுக்கு தலையில் பல வெட்டுகள் விழுந்துள்ளது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டதும் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மபநாபபிள்ளை ஸ்பாட்டுக்கு வந்தனர். வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கபடி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை முயற்சி நடந்துள்ளதாக தெரிகிறது. கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி மாணவனை சராமரியாக வெட்டிய சம்பவம் ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.