பதற வைத்த பேஸ்புக் போஸ்ட்: Airbnb ரூமில் நடந்தது என்ன? | CA buys helium | Dheeraj Kansal
ஹரியானா மாநிலம் கர்னாலைப் பூர்வீகமாகக் கொண்டவர் தீரஜ் கன்சால். வயது 25. குருகிராமில் ஒரு நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். டெல்லியில் உள்ள ஒரு பிளாட்டில் இவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் போனது. அங்கே சென்று பார்த்தபோது தீரஜ் முகம் முழுவதும் பாலித்தீன் கவர் சுற்றப்பட்டிருந்தது. அதற்குள் ஒரு டியூப் சொருகப்பட்டு சிறிய சிலிண்டரில் இணைக்கப்பட்டிருந்தது. ஆய்வில் தீரஜ் ஹீலியம் வாயுவை சுவாசித்து இறந்தது தெரிய வந்தது. Airbnb இணையதளம் மூலம் ஜூலை 20 முதல் 28 வரை பிளாட்டை புக் செய்துள்ளார். ஆன்லைன் மூலம் காசியாபாத்தில் இருந்து 3500 ரூபாய் கொடுத்து ஹீலியம் வாயு சிலிண்டர் வாங்கி இருக்கிறார். அவரது அறையில் இருந்த ஆவணங்கள் மூலம் இது தெரியவந்தது. தீரஜ் மரணத்துக்கு முன் மிகுந்த மன உளைச்சல் இருந்தது அவரது பேஸ்புக் பதிவு மூலம் உறுதியானது. மரணம் எனக்கு வாழ்க்கையின் மிக அழகான பகுதி. தயவுசெய்து என் மரணத்தைப் பற்றி வருத்தப்பட வேண்டாம். நீங்கள் இந்த பதிவை பார்க்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். மரணத்தை தேடிக்கொண்டது என்னுடைய சொந்த விருப்பம். என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒவ்வொரு நபரும் எனக்கு மிகவும் அன்பானவர்கள். எனவே, இதன் காரணமாக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். இந்த பூமியில் மீண்டும் பிறக்க விரும்பவில்லை. எனது பிறப்பை நான் வெறுக்கிறேன். இதை நான் பல வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். எனது மரணத்தால் யாரும் வருத்தப்பட வேண்டாம் என கூறியுள்ளார். இப்படி விரக்தியுடன் வாழ்வை முடித்துக்கொண்ட தீரஜ் கன்சாலுக்கு அப்பா, அம்மா அரவணைப்பு இல்லை. 2002ல் அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது அம்மா மறுமணம் செய்து வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். பாட்டி அரவணைப்பில் வளர்ந்துள்ளார். பாட்டியும் இறந்த பிறகு வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல போராடி இருக்கிறார். ஒரு சில முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் தற்போது விபரீத முடிவை தேடிக்கொண்டார். தனது உடலையும், உடல் உறுப்புகளையும் தானம் செய்துவிடுங்கள் என கடிதம் எழுதி வைத்துள்ளார். அவரது வங்கி கணக்கில் உள்ள பணம், சொத்துகளை அறக்கட்டளைகளுக்கு கொடுத்து விடுங்கள் என குறிப்பிட்டு உருக வைத்துள்ளார் தீரஜ் கன்சால். கார்டு: எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல உதவிக்கு மன நல ஆலோசனை எண் - 104 (அல்லது) 14416 என்ற எண்னை அழையுங்கள்