உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த 9 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் | Cannabis| Kanja Seized| Chennai

தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த 9 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் | Cannabis| Kanja Seized| Chennai

சென்னைக்கு அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தப்படுவதாக சென்னை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. நள்ளிரவில் வரும் விமான பயணிகளை, தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த பயணி ஒருவர் மேல் சந்தேகம் வலுத்தது. அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர். டூரிஸ்ட் விசாவில் போய் திரும்பி இருந்தார். சென்னைக்கு வந்தது ஏன் என விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவருடைய உடமைகளை சோதனை செய்ததில் சாக்லேட் பார்சல்கள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள் கிடைத்தது. அதில் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 7 கிலோ அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு 7 கோடி. இதே போல் மற்றொரு விமானத்தில் திரும்பிய வடமாநில பயணியும் அதிகாரிகளிடம் சிக்கி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரும் மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பிடிபட்டது. அதன் மதிப்பு 2 கோடி. 2 பேரையும் கைது செய்து தனி அறையில் விசாரணை நடத்தினர். இருவரும் கடத்தல் குருவிகள், கடத்தல் பின்னணியில் வேறு சிலர் இருப்பதும் தெரிய வந்தது. தொடர் விசாரணையில் கஞ்சாவை வாங்கி செல்ல வந்த ஒருவரையும் ஏர்போர்ட் அருகே கைது செய்தனர். அவர் கஞ்சா பார்சல்களை ரயில் மூலம் வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்ல இருந்தது தெரிய வந்தது. மூன்று பேரிடமும் கடத்தல் கும்பல் குறித்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை