உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடனம் ஆடிய பக்தர்கள் பறந்து விழுந்த சோகம் | Car hits devotees | Vinayagar idol procession | Devotee

நடனம் ஆடிய பக்தர்கள் பறந்து விழுந்த சோகம் | Car hits devotees | Vinayagar idol procession | Devotee

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீடுகள் மட்டுமின்றி பல்வேறு கோயில், பொது இடங்களிலும் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபாடு நடத்தினர். 5 நாட்கள் வழிபாடு முடிந்து ஞாயிற்றுக்கிழமை அனைத்து சிலைகளையும் ஆட்டம் பாட்டத்துடன் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக எடுத்து சென்று கரைத்தனர். ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் படேரு மண்டலத்தில் வைத்திருந்த விநாயகர் சிலையை கரைக்க அப்பகுதி மக்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். சிந்தலவீதி சந்திப்பில் சாலையோரம் ஆண்கள் பெண்கள் இணைந்து ஆரவாரத்துடன் நடனம் ஆடினர். அப்போது மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று கூட்டத்தில் புகுந்து பறந்தது. அங்கே ஆடிக்கொண்டிருந்த பலர் தூக்கி வீசப்பட்டனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், சீதாராம் என்பவர் அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த 3 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், வழக்கு பதிந்து, தப்பியோடிய கார் டிரைவரை தேடுகின்றனர். #CarHitsDevotees #VinayagarIdolProcession #DevoteeDied #AndhraPradesh #FestivalTragedy #RoadSafety #DevotionalEvent #CityAwareness #CommunitySupport #EmergencyResponse #TrafficAccident #HumanRights #SpiritualJourney #CulturesToCommunicate #PeacefulProcession #RememberTheFallen #AwarenessCampaign #SafetyFirst #ProtectTheDevotees

ஆக 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை