வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பதட்டம் Cauvery Flood| Dharmapuri| Karnataka flood
காவிரியில் மிரட்டும் வெள்ளம் கரையோர மக்கள் தவிப்பு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேஎஸ்ஆர், கபினி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. பாதுகாப்பு கருதி அணைகளுக்கு வரும் நீர் அனைத்தும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இப்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடியாக உள்ளது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கரையோர பகுதிகளான ஊட்டமலை, ஒகேனக்கல், சத்திரம், ஆலம்பாடி, தலவக்காடு உள்ளிட்ட பகுதிகளில், வீடுகள், தங்கும் விடுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அபாயகரமான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.