தமிழகத்துக்கு போதிய நீர் திறக்க கர்நாடகம் சம்மதம்! | Cauvery River | DK Shivakumar | Karnataka
மழை பெய்வதால் காவிரியில் நீர் திறக்கும் கர்நாடகா! காவிரி நீரை நம்பி தஞ்சாவூரை சுற்றி உள்ள டெல்டா மாவட்டங்கள் சம்பா குறுவை சாகுபடி செய்து வருகின்றன. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் 9.14 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. தண்ணீரும் கர்நாடக அரசிடம் இருந்து திறந்துவிடப்படும். இந்த ஆண்டு ஜூலை 12 முதல் மாத இறுதி வரை தினமும் ஒரு டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. கர்நாடகம் முதலில் ஏற்க மறுத்தது. பின் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு தினமும் 8 ஆயிரம் கனஅடி நீரை திறக்க சம்மதித்தது. இதற்கு தமிழக அரசு, அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இப்போது கர்நாடகாவின் குடகு மலையில் கன மழை பெய்து வருகிறது. காவிரி நீரை தேக்கி வைக்கும் கர்நாடக அணைகளில் நீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு போதிய நீர் தர முடியும் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.