உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குழந்தையை வைத்துக்கொண்டே இப்படியுமா? | CCTV | Theft | Erode

குழந்தையை வைத்துக்கொண்டே இப்படியுமா? | CCTV | Theft | Erode

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நகை கடை உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன் ஒரு பெண், கை குழந்தையுடன் வந்துள்ளார். தனக்கு புது டிசைனில் தங்க செயின் வேண்டும் என கேட்டுள்ளார். கடை உரிமையாளர் அவர் கேட்ட மாடல்களை எடுத்து டேபிளில் வைத்துள்ளார். அந்த பெண்ணும் ஒவ்வொரு செயினாக எடுத்து பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். திடீரென எனக்கு எந்த டிசைனும் பிடிக்கவில்லை என கூறிவிட்டு வேகமாக சென்றுள்ளார். அப்போதே நகை கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் குழந்தையுடன் வந்ததால் அப்படியே விட்டுவிட்டார். கடந்த வெள்ளியன்று கடையில் இருந்த நகைகளை சரி பார்த்துள்ளனர். அப்போது தங்க செயின் இருந்த ஒரு பெட்டியில் கவரிங் செயின் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த நகை கடை உரிமையாளர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தார். அவர் சந்தேகப்பட்டபடியே குழந்தையுடன் வந்த பெண் செயின் எடுத்தது தெரியவந்தது.

ஜூன் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !