ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது சந்தித்த மற்றொரு சவால் CDS Anil Chauhan |operation sindoor
சிங்கப்பூரில் பாதுகாப்பு தொடர்பான ஷாங்க்ரி-லா உச்சிமாநாடு நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளின் மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் பங்கேற்று பேசினார். இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஜிடிபி, சமூக, பொருளாதார விஷயங்களில் பாகிஸ்தான் எங்களைவிட முன்னணியில் இருந்தது. இன்று பொருளாதாரம், மனிதவள மேம்பாடு, சமூக நல்லிணக்கம் என அனைத்து நிலையிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது. 2014ல் நடந்த பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு நரேந்திர மோடி பாகிஸ்தான் தலைமைக்கு அழைப்பு விடுத்தார். அதுபோல் இந்தியா பல முறை ராஜதந்திர ரீதியாக பாகிஸ்தானை அணுகியது. கை தட்டுவதற்கு இரண்டு கைகள் வேண்டும்.