ஒதுக்குப்புறமான இடத்தில் சமூக விரோத செயல்கள் அதிகம் நடப்பதாக மக்கள் புகார்! Chain Snatching | Covai
கோவை வெங்கடாபுரம் அருகே உள்ள அத்தப்ப கவுண்டன்புதூரை சேர்ந்தவர் பார்த்திபன். க்யூ பிரிவு போலீசாக வேலை பார்க்கிறார். இவர் தனது மனைவியுடன் நேற்று இரவு ஓட்டலுக்கு காரில் சென்றுள்ளார். எல்என்டி பைபாஸ் அருகே சென்ற போது, ஒதுக்குபுறமான இடத்தில் 3 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழி மறித்துள்ளது. அரிவாளை காட்டி மிரட்டி, அவர் மனைவி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதை தடுக்க முயன்ற பார்த்திபனை லேசாக வெட்டி விட்டு கும்பல் தப்பி ஓடியது. காயமடைந்த பார்த்திபன் கோவை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து அரிவாள் ஒன்று மீட்கப்பட்டது. அதை வைத்து மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். போலீசை வெட்டி மனைவியிடம் நகை பறித்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.