சாம்பியன் கோப்பை வென்றது ஆர்ஆர் சாய் அபினவ் அணி! DPL| dinamalar premier league
ஜூனியர் கிரிக்கெட் லீக் போட்டி இளசுகளின் கலக்கல் ஆட்டம்! தினமலர் பிரீமியர் லீக் தினமலர் நாளிதழ், மக்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பரில் அபார்ட்மென்ட் சீனியர்களுக்கான கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. கடந்த மாதம், கோவை விழாவையொட்டி, கல்லுாரிகளுக்கு இடையேயான தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஜூனியர் வீரர்களையும் ஊக்குவிக்கும் விதமாக, அபார்ட்மென்ட் ஜூனியர் கிரிக்கெட் லீக் போட்டி கடந்த இரு நாட்களாக கோவை சி.ஐ.டி. கல்லுாரி மைதானத்தில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்றன. 10 ஓவர்கள், டென்னிஸ் பந்தில் நடத்தப்பட்டது.