நண்பர்கள் வீடியோ எடுக்கும் போதே துயரம் | Chennai | Instagram | reels
சென்னை எண்ணூர் சிவகாமி நகரை சேர்ந்தவர் பிரதீப், வயது 18. 12ம் வகுப்பு முடித்துள்ள இவர் கல்லூரியில் சேர தயாராகி வந்தார். சனிக்கிழமை மாலை நண்பர்களுடன் கடலில் குளிக்க கிளம்பினார். எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரைக்கு அனைவரும் சென்றனர். பிரதீப் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் ஆர்வம் கொண்டவர். தனது நண்பர்களிடம் தான் கடலில் நீந்துவை வீடியோ எடுக்க சொன்னார். உற்சாகம் மிகுதியால் அலைகளின் ஆபத்தை உணராமல் நீந்தினார். அப்போது ராட்சச அலையில் சிக்கிய பிரதீப் தூக்கி வீசப்பட்டார். தூண்டில் வளைவுக்காக போடப்பட்டிருந்த பாறையில் விழுந்தார். தலை, கால், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட நண்பர்கள் ஸ்டான்லி ஆஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்துவிட்டார் என்றனர். தகவலறிந்து வந்த எண்ணூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். ரீல்ஸ் மோகத்தில் வாலிபர் இறந்தது அப்பகுதியில் சோகத்தை உண்டாக்கியது.