கார் போன வேகத்தில் களேபரமான ECR ரோடு | Chennai Accident | ECR Road Accident
சென்னை ஈசிஆர் ரோட்டில் பாலவாக்கம் அருகே ஒரு கார் வேகமாக போனது. முதியவர் மீது உரசிவிட்டு தாறுமாறாக சென்றது. அந்த வழியாக பைக்கில் சென்ற இளைஞர் காரை மறித்து நிறுத்தினார். மெதுவாக போக சொல்லி கார் டிரைவரை எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த கார் டிரைவர் இளைஞரின் பைக் மீது மோதிவிட்டு ஈசிஆர் ரோட்டில் நிற்காமல் போனார். தொடர்ந்து ராங்க் ரூட்டில் காரை ஓட்டி எதிரே வந்த வாகனங்கள் மீது மோதினார். தொடர்ச்சியாக விபத்து ஏற்படுத்திக்கொண்டே சென்ற காரை நீலாங்கரை சிக்னல் அருகே மக்கள் மடக்கி பிடித்தனர். மக்கள் ரவுண்டு கட்டியதும் கார் ஓட்டி வந்த நபர் நெஞ்சு வலிப்பது போல நடித்தார்.
நவ 02, 2024