ரகசிய அறையில் தாய்லாந்து டு சென்னை பறக்கும் கஞ்சா! | Ganja | Ganja seized | Thailand | Chennai Airpo
அடுத்தடுத்து சிக்கும் குருவிகள்! இதுவரை 3 சம்பவம் சிக்கிய 14 கோடி மதிப்பு கஞ்சா தாய்லாந்திலிருந்து, சென்னை வரும் விமானத்தில் பெருமளவு போதைப்பொருள் கடத்தி வருவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. கஸ்டம் அதிகாரிகளுடன் வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நள்ளிரவு வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். சென்னையைச் சேர்ந்த 30 வயது ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. டூரிஸ்டாக தாய்லாந்து சென்று மறுநாளே அவர் சென்னை திரும்பி இருந்தார். அவருடைய உடமைகளை சல்லடை போட்டதில் சூட்கேசில் ரகசிய அறை இருந்ததை கண்டுபிடித்தனர்.