/ தினமலர் டிவி
/ பொது
/ கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி ஊரை கூட்டி ஒப்பாரி chennai crime news | wife arrest | kodungaiyur case
கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி ஊரை கூட்டி ஒப்பாரி chennai crime news | wife arrest | kodungaiyur case
சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 35. கார் டிரைவர். இவரது மனைவி சரண்யா. தம்பதிக்கு 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கணவன், மனைவி இடையே அவ்வப்போது சண்டை சச்சரவு இருந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவில் 9 மணிக்கு மணிகண்டன் வீட்டுக்கு வந்தார். மது போதையில் இருந்தார். கணவன், மனைவி இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. பின்னர் போதையில் இருந்த மணிகண்டன் பெட்ரூமுக்கு சென்று தூங்கி விட்டார். சரண்யாவும் பிள்ளைகளும் ஹாலில் தூங்கினர்.
நவ 25, 2025