வெறியில் பாய்ந்த பிட்புல் நாய்: ஒருவர் மரணம் | Chennai dog | Pit Bull
தொடைக்கு கீழ் முழுசா குதறிடுச்சு சென்னையை அலற விட்ட சம்பவம் சென்னை ஜாபர்கான் பேட்டை குமரன் நகரை சேர்ந்தவர் கருணாகரன். வயது 43. இவரது வீட்டின் அருகே பூங்கொடி என்பவர் பிட் புல் நாய் வளர்த்து வந்தார். இன்று மாலை 3 மணியளவில் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் போனார். அப்போது வீட்டின் அருகே அமர்ந்திருந்த கருணாகரனை பிட் புல் நாய் கடித்தது. இதில் அந்தரங்க உறுப்பு, தொடை, இடுப்பு என பல இடங்களை குதறி எடுத்தது.
ஆக 19, 2025