உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2 ஐஐடிக்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து! Chennai IIT | Ropar IIT | BS Data Science

2 ஐஐடிக்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து! Chennai IIT | Ropar IIT | BS Data Science

சென்னை ஐஐடி மாணவர் இறுதிஆண்டு ரோபர் ஐஐடியில் படிக்கலாம்! சென்னை ஐஐடிக்கும், பஞ்சாப் மாநிலம் ரோபரில் உள்ள ஐஐடிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, ரோபர் ஐஐடி இயக்குனர் ராஜீவ் அஹுஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சென்னை ஐஐடியில் இளநிலை டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்கள், ரோபரில் உள்ள ஐஐடியில் இறுதி ஆண்டையும், மேற்படிப்பையும் படிக்க முடியும். இந்தியாவின் உயர்கல்வி வரலாற்றில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரோபர் ஐஐடி இயக்குனர் ராஜீவ் அஹுஜா தெரிவித்தார். இரண்டு ஐஐடிக்களுக்கு இடையே முதல்முறையாக இதுபோன்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி