/ தினமலர் டிவி
/ பொது
/ 12 மாவட்டத்தில் ஊற்றும் பேய் மழை-முக்கிய அப்டேட் tn heavy rain alert | chennai imd | cyclone ditwah
12 மாவட்டத்தில் ஊற்றும் பேய் மழை-முக்கிய அப்டேட் tn heavy rain alert | chennai imd | cyclone ditwah
இலங்கை கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. அதற்கு டிட்வா Ditwah என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இலங்கை கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டியபடி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 500 கிமீ தூரத்தில் நிலை கொண்டிருக்கும் டிட்வா, 30ம் தேதி தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதியை நெருங்கும். இதனால் தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்க்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
நவ 28, 2025