உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பதற வைத்த மெட்ரோ தூண்: சென்னையில் பரபரப்பு | Chennai Metro | Metro Phase 2

பதற வைத்த மெட்ரோ தூண்: சென்னையில் பரபரப்பு | Chennai Metro | Metro Phase 2

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ பணிகள் நடக்கிறது. கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்க பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. இதில் காட்டுப்பாக்கம் பூந்தமல்லி இடையே 4 சாலை சந்திப்பில் 30 அடிக்கும் மேல் ராட்த தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பாதி அளவுக்கு கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் அதற்கு மேல் தூண்கள் அமைக்க கம்பிகள் கட்டப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களாக கம்பிகள் மட்டும் கட்டப்பட்டு அதில் கட்டுவேலை செய்யப்படவில்லை. பாரம் தாங்காமல் கம்பிகள் ஒருபுறம் சாய்ந்து தொங்கியது.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ