மெட்ரோ திட்டம்: தமிழக அரசின் நிதிச்சுமை குறையும்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுவரை மாநிலத்தின் திட்டமாக இருந்தது. அதற்கான நிதியில் 90 சதவீதத்தை தமிழக அரசு ஏற்பதாக இருந்தது. எஞ்சிய 10 சதவீத திட்ட செலவை மத்திய அரசு செய்வதாக இருந்தது. தமிழக அரசு சார்பில் 22,228 கோடி, மத்திய அரசு சார்பில் 7425 கோடி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்தரவாதத்தில் 33,593 கோடியும் கடனும் பெறப்படும் மாநில அரசு தெரிவித்து இருந்தது. தற்போது இத்திட்டம் மத்திய அரசு திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான 65 சதவீத நிதியை மத்திய அரசே வழங்க உள்ளது. மத்திய அரசின் பங்கான 7425 கோடியுடன், பன்னாட்டு வங்கிகளிடம் இருந்து பெறப்படும் 33,593 கோடி கடனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இதனால் மாநில அரசின் நிதிச்சுமை குறைந்துள்ளது.