உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தால் தமிழக அரசு நடவடிக்கை Chennai police commssioner| Amstrong| BSP

ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தால் தமிழக அரசு நடவடிக்கை Chennai police commssioner| Amstrong| BSP

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, சென்னை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் சென்னை மாநகரின் 110வது போலீஸ் கமிஷனர். சந்தீப் ராய் ரத்தோர், போலீஸ் பயிற்சி கல்லூரி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். போலீஸ் அகாடமி இயக்குநர் பதவியையும் அவர் கூடுதலாக கவனிப்பார். காவல்துறை தலைமையக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னையில், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 11 பேர் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர். குற்ற சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக விமர்சிக்கின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை சதித்திட்டம் பற்றி 3 முறை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அலர்ட் வந்தும் கண்டுகொள்ளவில்லை என கூறப்பட்டது. ஆனால், அப்படி ஏதும் தகவல் வரவில்லை என கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியிருந்தார். ஒரு கட்டப்பஞ்சாயத்தில் அவர் 50 கோடி ரூபாய் வரை பணம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. திமுக அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் இது போன்ற பல சர்ச்சைகள் எழுந்ததால் சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டு இருக்கலாம் கூறப்படுகிறது.

ஜூலை 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை