/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையில் திடீரென உள்வாங்கிய அபார்ட்மென்ட் Chennai rain| chennai appartment
சென்னையில் திடீரென உள்வாங்கிய அபார்ட்மென்ட் Chennai rain| chennai appartment
வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. இச்சூழலில், சென்னை, அமைந்தகரையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அபார்ட்மென்ட்டின் சுற்றுச்சுவர் வளாகம் திடீரென உள்வாங்கியது. தரை உள் இறங்கியதால் கான்கிரீட் தளம் உடைந்தது. இந்த அபார்ட்மென்டில் 200க்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். கட்டடத்தின் சுவர்களிலும் பாளம் பாளமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டடம் இடிந்து விடுமோ என அங்கு வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அபார்ட்மென்ட் அருகே பிமாண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதன் பேஸ்மென்ட்டுக்காக பள்ளம் தோண்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகே உள்ள அபார்ட்மென்டில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
அக் 15, 2024