உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசிடம் கேள்வி மேல் கேள்வி: குடிமகன் குமுறும் காட்சி | Chennai | TASMAC | TASMAC Video

போலீசிடம் கேள்வி மேல் கேள்வி: குடிமகன் குமுறும் காட்சி | Chennai | TASMAC | TASMAC Video

சென்னை ஆதம்பாக்கம் திருவள்ளூர் ரோட்டில் டாஸ்மாக் அருகே பார் இயங்கி வருகிறது. இங்கு அதிகாலை முதலே விதி மீறி மது விற்பனை ஜோராக நடப்பதாக கூறப்படுகிறது. நேரம் காலம் பார்க்காமல் எப்போது சென்றாலும் மது கிடைக்கும் என்கிற நிலை உள்ளது. இதனால் அப்பகுதி முழுக்க குடிமகன்கள் ராஜ்ஜியம் தான். பொழுது விடியும் போதே போதையில் தள்ளாடியபடி செல்வதை சர்வசாதாரணமாக காணலாம். இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் கொடுத்ததை தொடர்ந்து போலீசார் டாஸ்மாக் பார் வாசலுக்கே வந்தனர். குடித்துவிட்டு பாரில் இருந்து போதையில் வெளியே வரும் குடிமகன்களை அங்கேயே நிறுத்தி அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நடந்து செல்லும் தூரத்தில் தான் வீடு இருக்கு. லோக்கல் ஆட்களுக்கு ஏன் அபராதம் போடுறீங்க என கேட்டு போலீசிடம் வாக்குவாதம் செய்தனர். பார் வாசலில் நின்று கொண்டு, குடித்துவிட்டு வருவதாக சொல்லி அபராதம் போடுவது நியாயமா என குமுறினர்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ