பர்த் டே பார்ட்டியில் நண்பனை வெட்டிய 7 பேர் சிக்கினர்
சென்னை வியாசர்பாடி, புது நகரை சேர்ந்தவர் சங்கர்; வயது 19. படிப்பு சரியாக வராததால் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். 2 தினங்களுக்கு முன்பு சங்கருக்கு பிறந்தநாள் என்பதால், நண்பர்கள் சேர்ந்து கருணாநிதி சாலையில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். மது குடித்து நண்பர்கள் ஜாலி செய்தனர். போதை தலைக்கேறிய நிலையில், சங்கருக்கும் சக நண்பர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. சங்கர் தப்பித்து செல்ல முயன்றபோது, விரட்டி சென்ற நண்பர்கள் எருக்கஞ்சேரி கைலாசம் தெருவில் உள்ள முட்புதரில் சங்கரை சரமாரியாக வெட்டி கொன்றனர்.
ஜூலை 15, 2025