பிற ஊர் பஸ்களை திருவண்ணாமலைக்கு திருப்பியதால் சிக்கல் | Chennai | Kilambakkam
சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ்கைள சிறை பிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று பவுர்ணமி மற்றும் ஆடி ஞாயிறு என்பதால், திருவண்ணாமலை கோயிலுக்கும், கிரிவலம் செல்லவும் அதிக அளவில் பயணிகள் கிளாம்பாக்கத்தில் திரண்டனர். கூட்டம் அதிகரித்ததால், பிற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன. இதனால், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, ஜெயங்கொண்டம், பண்ருட்டி, கடலூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல போதிய பஸ் இல்லாததால், பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. இது குறித்து போக்குவரத்து துறை ஊழியர்கள், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் அதை கண்டுகொள்ளாததால், பஸ் ஸ்டாண்ட் வாசலில் நின்று பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளியேறும் பஸ்களை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.