உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 100 சவரன் கொள்ளை; திடீர் ட்விஸ்ட்; போலீஸ் கடுப்பு chennai crime 100 SOVEREIGN Theft chennai pol

100 சவரன் கொள்ளை; திடீர் ட்விஸ்ட்; போலீஸ் கடுப்பு chennai crime 100 SOVEREIGN Theft chennai pol

திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன்(45). இன்ஜினியர். துபாயில் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். சில வாரங்களுக்கு முன் விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தார். மனைவி கோகிலா மற்றும் மகளுடன் கடந்த திங்களன்று வெளியே சென்றார். நள்ளிரவில் வீடு திரும்பினர். பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்டு ஜனார்த்தனம்,கோகிலா அதிர்ச்சியடைந்தனர். திருவேற்காடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார், தெருவிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். ஒருவர் முகமூடி அணிந்தபடி வந்து சாவியை போட்டு கதவை திறந்து உள்ளே சென்று நகை பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. கஷ்டப்படாமல் ஈசியாக பூட்டை திருடன் திறப்பதை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. வீட்டு சாவி, ஜனார்த்தனம், அவர் மனைவி கோகிலா, மகள் ஆகியோரிடம் மட்டும்தான் உள்ளது.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !