உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சல்லடை போடும் வெடிகுண்டு நிபுணர்கள்: நடந்தது என்ன? | Chennai | Bomb

சல்லடை போடும் வெடிகுண்டு நிபுணர்கள்: நடந்தது என்ன? | Chennai | Bomb

சென்னை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் 5வது தெருவை சேர்ந்தவர் முஸ்தபா. தனது வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது ஏதோ பெரிய அளவிலான இரும்பு தட்டுவது போல தெரிந்துள்ளது. புதையலாக இருக்குமோ என நினைத்து தோண்டி எடுத்து சுத்தம் செய்துள்ளார். பார்க்க ஏரியல் பாம் வடிவில் வெடிகுண்டு போல இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பயந்து போன முஸ்தபா இது குறித்து எண்ணூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். எண்ணூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஸ்பாட்டுக்கு வந்து ஆய்வு நடத்தினார். போலீசுக்கும் சந்தேகம் ஏற்பட்டதால் தாசில்தாருக்கு தகவல் சொல்லப்பட்டது. அவர் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளார். மெட்டல் டிடக்டர் கருவி மூலம் முஸ்தபா வீட்டில் எடுத்த இரும்பு பொருள் ஆய்வு செய்யப்பட்டது. அது வெடிக்காத நிலையில் உள்ள பழைய வெடிகுண்டு என்பதை உறுதி செய்தனர். கிட்டதட்ட இரண்டு அடி வரை உள்ள இந்த குண்டு துருபிடித்த நிலையில் உள்ளது. இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது வெடிகுண்டை மீட்ட அதிகாரிகள் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்து சென்றனர். அதன் தன்மை, வெடிக்கும் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை